Home செய்திகள்கீழக்கரை செய்திகள் விரகனூர்  ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம். 

விரகனூர்  ஊராட்சி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு சிறப்பு முகாம். 

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தீவிர டெங்கு ஒழிப்பு முகாம் நடைபெற்றது. 

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர்  குமரகுருபரன் உத்தரவின் பெயரில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் தனசேகரன் திருப்பரங்குன்றம் வட்டார  சுகாதார மேற்பார்வையாளர் அழகுமலை பிரதமர் ஊராட்சி செயலாளர் ராஜாமணி சரவணன் வெங்கடேஷ்  மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் டெங்கு ஒழிப்பு துப்புரவு பணிவுகளில் ஈடுபட்டு வந்தனர்

விரகனூர் பகுதியில் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவற்றில் சோதனையில் ஈடுபட்டனர் .

அப்போது பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடைகளில் டயர்கள் மற்றும் பழைய உரல் போன்றவற்றில் மழை நீர் தேங்கி டெங்கு கிருமிகள் இருந்தன. அவற்றை துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் சுகாதார ஆய்வாளர்கள்  டெங்கு காய்ச்சல் பரப்பும் நோய் கிருமிகள்   உள்ள கடைகளுக்கு  ரூபாய் 5000 மற்றும் 4000 விதம் எட்டு கடைகளுக்கு மொத்தம் 24,000 அபதாரம் விதித்தனர். 

மேலும் டெங்குவை பரப்பும் விதமாக அடுத்த முறை இருந்தால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு வளரும் வகையில் வைத்து இருந்த காரணத்தால் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் 8 கடைகளுக்கு சுமார் 24000 அபராதம் விதிக்கப்பட்டது. 

இதனால்  விரகனூர் பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வினால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com