Home செய்திகள் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பிரசாரம்..

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பிரசாரம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், நவ.24 – இராமநாதபுரம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரசார துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்தார். அவர் தெரிவிக்கையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை மூலம் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை (நவீன வாசக்டமி) சிகிச்சை வழங்கப்படுகிறது.

இச்சிகிச்சைக்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023 டிச. 4 வரை அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளது. இதுவரை தற்காலிக மற்றும் நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் உயர்வரிசை குழந்தை பட்டியலில் ஏராளமான தாய்மார்கள் உள்ளனர். சிலருக்கு குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்று கொள்ள முடியாத வகையில் உடல்நிலை பிரச்னைகள் உள்ளது. இதனால் 49 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

இந்நிலையில் மருத்துவ சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தின் போது உயிர் இழக்கும் அபாயம் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் வகையில் கணவர் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுடன் இத்தகைய சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தகுதியானோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். நகராட்சி, ஊராட்சிகளுக்கு விழிப்புணர்வு வாகனம் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குடும்ப நலத்துறை துணை இயக்குநர் சிவானந்தவல்லி, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் சகாய ஸ்டீபன் ராஜ், அலுவலக கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!