விருது பெற்ற தூத்துக்குடி ஆட்சியர்..

நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் “தேசியநீர் விருது”கள் 2018 : தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பெற்றார். புதுடெல்லியில் மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் 2018 ஐ மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு வழங்கினார்

இந்தியாவின் தென் மண்டலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த மாவட்டங்களுக்கான விருதுகளில் நதி மீட்டெடுத்தல் திட்டத்திற்க்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது. அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி திருநெல்வேலி மாவட்டத்திற்கான விருதினை தாமிரபரணி தூய்மை திட்டத்தை தொடங்கிய மைக்காக பெற்றுக் கொண்டார்.

அவர் இப்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக உள்ளார்