இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு சாதனையாளர்கள் விருது..

சமூக சேவை, யோகா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை புரிந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச யோகா சாதனை மாணவி, மராத்தான் மாணவி சமூகசேவகர் ஆகியோருக்கு கோவை நூலகம் சார்பில் சக்சஸ் அவார்டு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சாதனையாளர்களுக்கு சக்சஸ் அவார்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் கல்வி, சமூகசேவை, விளையாட்டு, யோகாசனம், கிராமிய நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட துறை சாதனையாளர்கள் 100 பேரை தேர்வு செய்து கோவை நூலகம் சக்ஸஸ் விருது வழங்கி கவுரவித்தது. இதன்படி, கரூர் ஜி .ஆர் திருமண மண்டபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி 29.9.2018ல் நடைபெற்றது.

இதில் சமூக பணி விழிப்புணர்வு, ரத்த தானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியமைக்காக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குண்டுகுளத்தைச் சேர்ந்த பசும்பொன் இளைஞர் மன்ற தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன், யோகா போட்டி சர்வதேச சாதனையாளரும், சர்வதேச யோகா வல்லுநர் பத்மநாபன் (உடற்கல்வி இயக்குநர், ஓய்வு) மாணவியும், தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை எம்.எஸ்சி இரண்டாம் ஆண்டு மாணவி முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிப்பட்டி சி. காமாட்சி, கமுதி பசும்பொன் தேவர் கல்லூரி விளையாட்டு வீரர் தாவரவியல் துறை மாணவி பி.கீரந்தை கௌசல்யா ஆகியோர் உள்பட நூறு பேருக்கு சக்சஸ் அவார்ட்ஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கரூர் முதன்மை கல்வி அலுவலர் அனந்த நாராயணன், வக்கீல் ஷகீலா பேகம், கவிஞர் தென்றல், முனைவர் பால்பாண்டியன், ஜவாருல்லா , குரு ராஜேந்திரன், நந்தவனம் சந்திரசேகர், பொம்முடி முருகேசன் ஆகியோர் விருது வழங்கினர். இந்த நிகழ்ச்சியின்  ஏற்பாடுகளை சக்சஸ் சந்த்ரு செய்திருந்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.