இராமநாதபுரம் ஆட்சியருக்கு டில்லியில் விருது…

தேசிய அளவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த அரசு அதிகாரிகளுக்கு தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி புதுடில்லி விஞ்ஞான் பவனில் இன்று (01.10.2018) நடந்தது.

இந்நிகழ்வில் மூத்த குடிமக்களுக்கு கடந்த 2017-18 நிதி ஆண்டில் சிறப்பாக சேவை ஆற்றியமைக்காக மதுரை மாவட்டத்திற்கு Vayoshrestha Samman விருது கிடைத்துள்ளது. இந்த விருதை துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி தற்போது இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் கொ.வீரராகவ ராவிற்கு வழங்கி கவுரவித்தார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.