Home செய்திகள் சித்தார்கோட்டை பள்ளியில் சுற்றுச்சூழல் வாழ்வியல் விழிப்புணர்வு முகாம்..

சித்தார்கோட்டை பள்ளியில் சுற்றுச்சூழல் வாழ்வியல் விழிப்புணர்வு முகாம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.14- 

இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள் தொடர்பகம் ராமநாதபுரம் சார்பில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு, சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறை, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் விழிப்புணர்வு முகாம் சித்தார்கோட்டை மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜவஹர் அலி வரவேற்றார். சிறுதானியங்கள் அவசியம், சுற்றுச்சூழல் குறித்து  மத்திய மக்கள் தொடர்பக தொழில்நுட்ப உதவியாளர் எஸ்.ஆர். சந்திரசேகரன்  பேசினார்.

சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்து ராமநாதபுரம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வி.மீனாட்சி சுந்தரேஸ்வரி பேசினார். சிறுதானியங்களின் வகைகள், அதன் நன்மைகள் குறித்து முஹமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் எம்.மீரா பேசினார். சிறுதானியங்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான போட்டிகளில் முதல் மூன்றிடம் பிடித்த ஏழாம் வகுப்பு மாணவிகள்

அ.அஜ்ருன் ராபியா, பை.மதினா ஜாஸ்மின், அ.ஆயிஷா சித்திக்கா, எட்டாம் வகுப்பு மாணவி க. அழகு சன்மதி, ஏழாம் வகுப்பு மாணவி ப. ஹன்சிகா ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகளாக கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மத்திய மக்கள் தொடர்பக  இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் டி. ஜெயராஜூ நன்றி கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com