புதிய ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்து வருடங்கள் ஆகியும் ஏடிஎம் எந்திரத்தில் செலுத்த வசதியில்லை…

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசால் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது அதற்கு பதிலாக புதிய 2,000, 200, 100 மற்றும் 50 ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ஏடிஎம் மிஷினில் செலுத்தும் வசதி உள்ளது, ஆனால்  பிற நோட்டுக்களை செலுத்துவதற்கு இன்னும் வழிவகை செய்யப்படாமலே உள்ளது. இந்நிலை அறிந்தும் பல வங்கிகளில் ஏடிஎம்  எந்திரத்தில் பணம் செலுத்த கூறி வாடிக்கையாளர்களை அலைக்கழிக்கப்பு செய்கிறார்கள், அதையும் மீறி நேரடியாக பணம் செலுத்தினால் அதற்கு சேவை தொகையும் வசூலிக்கிறார்கள்.

இதனால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுகிறது. மேலும் தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும்,  வியாபாரம் பெருமக்களும்,  பொதுமக்களும் மிகவும்  சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.  இதற்கு முடிவு கட்டும் வண்ணம் வங்கி நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,  பலமுறை புகார் அளித்தும் அதைப்பற்றி கண்டு கொள்வதாக இல்லை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். தற்சமயம் அதிக அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளதால் ஏடிஎம்மில் செலுத்தும் வகையில் ஏடிஎம் மிஷினில் மாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை வைக்கிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்