முஸ்லிம் லீக் வேட்பாளர் இராமேஸ்வரத்தில் வாக்கு சேகரிப்பு..

இராமநாதபுரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா.நவாஸ் கனி ராமேஸ்வரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக தேர்தல் பணி அலுவலகத்தை வேட்பாளர் நவாஸ் கனி திறந்து வைத்தார்.

300க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பின் தொடர திறந்த வாகனத்தில சென்று பொது மக்களிடம் நவாஸ் கனி வாக்கு சேகரித்தார். இராமேஸ்வரம் நகராட்சி 21 வார்டுகள், ஓலைக்குடா, மாங்காடு, சம்பை, ஏரகாடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.

இப்பிரச்சாரத்தின் போது திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், முன்னாள் எம்பி., பவானி ராஜேந்திரன், காங்., மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், நகர் செயலர் கே.இ.நாசர் கான், காங்., நகர் தலைவர் பாரி ராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.