தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரடியாக சென்று ஆறுதல் கூறி நிதி உதவி..

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 1லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்திருந்தார்.  அதனை தொடர்ந்து காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி இல்லத்திற்கு சென்று அவர் தந்தையிடம் ஆறுதல் தெரிவித்த பின் அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மரியாதை செய்தார்.

பிறகு ராணுவ வீரரின்  தந்தையிடம் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கினார் செய்தி. வி.காளமேகம் மதுரை மாவட்டம்