2857 போலி மது பாட்டில்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது…

மதுரை மாநகர் B3 தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை கல்லம்பல ரோட்டில் உள்ள ரஸ்க் கம்பெனி எதிரில் உள்ள முள்புதரில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணை மேற்கொண்டதில் மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது 1. மதுரை அனுப்பானடியை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் பாலமுருகன் 42/19, 2. மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் மோகன் 51/19 மற்றும் 3.ஐராவதநல்லூரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் செல்வக்குமார் 40/19 ஆகியோர்கள் என விசாரணையில் தெரியவந்தது. எனவே B3 தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.மலைச்சாமி அவர்கள் மேற்படி மூன்று நபர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்ததில் அவர்கள் மூவரும் இணைந்து அரசு மதுபானக்கடைகளில் உள்ள ஸ்டிக்கர்களை போல் போலி ஸ்டிக்கர் தயார் செய்து மது பாட்டில்களில் ஒட்டி விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. எனவே மேற்படி மூன்று நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2857 மது பாட்டில்கள் மற்றும் ஒரு ஆட்டோவும் பறிமுதல்செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

#Paid Promotion