கொக்கு வேட்டை 4 பேருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்..

இராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனவர் மதிவாணன், வனக்காப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கடந்த சில நாட்களாக மாலை வேளைகளில் கொழுவூர் பகுதியில் திடீர் ரோந்து சென்றனர். அப்போது தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்த 4 பேர் இரு சக்கர வாகனங்களுடன் பிடிபட்டனர்.

இவ்விசாரணையில், தேவிப்பட்டினத்தை சேர்ந்த அம்மா சி மகன் பாண்டிச்சாமி, முனியாண்டி மகன் கோட்டை , கணேசன் மகன் புல்லாணி, செல்லையா மகன் முருகன் ஆகியோர் கொக்குகளை வேட்டையாடியது தெரிந்தது. இவர்களிடமிருந்து கொக்குகள், கவண் , கம்பிச்சுருள், இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்