தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் வைரக்கல் தேடியதாக ஆறு பேர் கைது …

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட வருசநாடு ரேஞ்ச், மஞ்சனூத்து தெற்குச் சரகம், உப்புக்கொண்டான் பாறை எனும் இடத்தில் மர்ம நபர்கள் சிலர் வைரக் கல் தேடுவதாக மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரின் வழிகாட்டுதலின் பேரில், ரேஞ்சர் இக்பால் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அனுமதி இல்லாமல், வனத்திற்குள் முகாமிட்டிருந்த ஆறு பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வைரக்கல் தேடிவந்ததை ஒப்புக் கொண்டத கூறப்படுகிறது, எனவே, அவர்கள் அனைவரையும் ரேஞ்சர் இக்பால் தலைமையிலான குழு கைது செய்தது.

செய்தி: பக்ருதீன்