Home செய்திகள் உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த இளைஞர் கைது… 4 கிலோ கஞ்சா பறிமுதல்..

உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த இளைஞர் கைது… 4 கிலோ கஞ்சா பறிமுதல்..

by ஆசிரியர்

தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதால் குறிப்பாக கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது அதனை தடுக்கும் விதத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் தனி குழு அமைத்து ஒவ்வொரு பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அவ்வப்போது கஞ்சா மற்றும் புகையிலை பறிமுதல் செய்து விற்பனை செய்து வருவதே கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எவ்வளவு தான் கஞ்சா குட்கா புயலே விற்பனை செய்து வருபவர்களே காவல்துறையினர் அடக்கி கைது செய்து வந்தாலும் அவ்வப்போது கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் உசிலம்பட்டி தேனி ரோட்டில் அமைந்துள்ள அரசு பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பவித்ரன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் கெடுபிடி விசாரணை செய்தபோது அவர் சிறு சிறு பொட்டலங்காலாக கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது அதனை தொடர்ந்து அவருடைய வீட்டில் சோதனை செய்தபோது நாலு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பவித்ரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தமிழகம் முழுவதும் கூடுதல் தனிப்படை அமைத்து கஞ்சா பறிமுதல் செய்து விற்பவர்களை கைது செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கையாக அமைந்துள்ளது இரண்டு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி மதுரை ரோட்டில் அமைந்துள்ள சலூன் கடையில் பணியாற்றியவர் முடி திருத்த வரும் இளைஞர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்து கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!