Home செய்திகள் இராமநாதபுரத்தில் வன உயிரினங்களின் இறைச்சி விற்பனை: தந்தை, மகன் கைது.

இராமநாதபுரத்தில் வன உயிரினங்களின் இறைச்சி விற்பனை: தந்தை, மகன் கைது.

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.19- 

இராமநாதபுரம் அருகே பேராவூர் எம்ஜிஆர் நகரில் முயல், மான் ஆகிய வன உயிரினங்களின் இறைச்சி வணிகரீதியாக விற்கப்படுவதாக தகவல் மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்படி மாவட்ட வன அலுவலாரால் வன சரக அலுவலர்கள் தலைமையில் தனி குழு மாறு வேடத்தில் பேராவூர் எம்ஜிஆர் நகரை கண்காணித்தனர். வன உயிரினங்கள் இருப்பதை உறுதி செய்தனன். மாறுவேடத்தில் சென்ற மற்றொரு தனிக்குழு  முயல் கறி வெட்டிக் கொண்டிருந்த 2 பேரிடம் கறி வாங்குவது போல் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பணியாளர்கள் அங்கே சென்று குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பரமக்குடி வனச்சரக அலுவலகம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அசோகன் 60, இவரது மகன் சிரஞ்சீவி 36 ஆகியோர் என தெரிய வந்தது. இவர்களிடமிருந்து முயல் கறி, உயிருடன் 2 முயல், வேட்டைக்கு பயன்படுத்திய கத்தி, டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரையும் பரமக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வனத்துறையினரின் விசாரணையில் பேராவூர் எம்ஜிஆர் நகரில் வன உயிரினங்கள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு  அதன் இறைச்சி வணிகரீதியாக விற்கப்படுவது தெரியவந்தது. வன உயிரினங்களை வேட்டையாடி விற்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் இச்செயல்களில் பொதுமக்கள் யாரும் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு என வனத்துறையினர்  அறிவுறுத்தினர்.

அண்டக்குடி அருகே கொக்குகளை வேட்டையாட முயன்ற இருவரை வனத்துறையினர் பிடித்தனர். விசாரணையில், பரமக்குடியை சேர்ந்த லட்சுமணன் மகன் அலக்சாண்டர் 25, ராஜ் மகன் சிவசங்கர் 24 ஆகியோர் என தெரிந்தது. இவர்கள் வேட்டையாடி வைத்திருந்த கொண்டை நீர் காகம் 2, செல் போன் 2, டூவீலர் 2, வேட்டைக்கு பயன்படுத்திய கத்தி, உண்டி வில் ஆகியவற்றை கைப்பற்றினர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்விரு வழக்குகளிலும் வனச்சரகர்கள் அன்பரசி, நித்யகல்யாணி, ராஜசேகரன், அருண்குமார், நாகராஜன், வனவர்கள், வனக்காப்பாள்ர்கள், வனக்காவலர்கள் இணைந்து செயல்பட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!