Home செய்திகள் கலசபாக்கத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி…

கலசபாக்கத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி…

by ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டார வேளாண்மை துறை அலுவலகத்தில் ஆத்மா திட்டத்தின் மூலம் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் திருந்திய கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குனர் நுண்ணீர் பாசன திட்ட சார்பில் அசோக்குமார் இப்பயிற்சிக்கு தலைமை தாங்கி நுண்ணீர் பாசன திட்டம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தார். திருவண்ணாமலை வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் ராமநாதன் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறையில் அதிக மகசூல் பெறுதல் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். கலசபாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். கலசப்பாக்கம் வேளாண்மை அலுவலர் பழனி கரும்பு சாகுபடியில் உர மேலாண்மை மற்றும் நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சௌந்தர் உழவன் செயலி மூலம் விவசாயிகள் மானிய திட்டங்களில் முன்பதிவு செய்து பயன்பெறுதல் குறித்து உரையாற்றினார் நிம்பஸ் நுண்ணீர் பாசன நிறுவன மண்டல அலுவலர் செல்வ பாண்டியன் சொட்டுநீர் பாசனம் அமைத்து கரும்பு நாற்று நடவு செய்து நீர் வழி உரம் இடுதல் மற்றும் சொட்டுநீர் பாசன அமைப்பு பராமரித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் வீரபாண்டியன், அன்பரசு மற்றும் சிவசங்கரி ஆகியோர் செய்தனர். நெருப்பு கூட்டத்தில் கலசப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகளும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!