கஞ்சா விற்பனை செய்த இரண்டு நபர் கைது

C3-எஸ்.எஸ்.காலனி ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் மதுரை எல்லீஸ்நகர் கென்னட் ரோடு, பி.ஆர்.சி டிப்போ அருகே ரோந்து பணியில் இருந்தபோது மதுரை மகாபூப்பாளையம், காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் அஜித்குமார் 22/19 மற்றும் மதுரை சிங்கராபுரத்தைச் சேர்ந்த சூசைநாதன் என்பவரின் மகன் மதிம்வாணன் 62/19 ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1.500 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.300/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்