இராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் ரோந்தில் 8 பேர் கைது…

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சட்ட விரோத மது விற்பனையை தடுப்பதற்காக இராமநாதபுரம், கமுதி, முதுகுளத்தூர் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.

நேற்று (14.3.19) நடத்திய சோதனையில் சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 81 மது பாட்டிகள், 14 லிட்டர் கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நயினார் கோவில் அருகே மூவலூர் பாஸ்கரன் 45, ராமநாதபுரம் மூலக்கொத்தலம் சண்முகம் 45, தொண்டி மணிகண்டபிரபு 35, தொண்டி அருகே கடம்ப னேந்தல் ராமசுப்ரமணிய 42, கமுதி அருகே பெருமாள் கோயில் தோளூர் வடக்கூர் வேலுச்சாமி 48, சுப்பையா 43, அபிராமம் ராசு 48, முதுகுளத்தூர் அருகே மேல மணக்கரை மூர்த்தி 48 ஆகியோரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.