தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 200 கிலோ கடல் அட்டை பறிமுதல் மரைன் போலீஸ் அதிரடி..

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கடல் அட்டைகளை மரை ன் போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். தூத்துக்குடி மரைன் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் தாளமுத்துநகர்பகுதியில் உள்ள கோவில்பிள்ளைவிளை பகுதியில் உள்ள ஒரு சங்கு குடோனில் திடிரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த குடோனின் மாடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பதப்படுத்திய சுமார் 210 கிலோ எடையிலான கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்வதற்காக அங்கு பதுக்கி வைத்திருந்த லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த சதாசிவம்(28) மற்றும் திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ்(42) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மதிப்பு பல லட்சம் ஆகும்.