புகையிலைக்கு எதிரான குழந்தை இயக்கம் பற்றிய பயிற்சியாளர்களுக்கான பயிற்சி..!

நிலக்கோட்டை தாலுகா மற்றும் ஆத்தூர் தாலுகா அளவிலான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது இதில் 40 கிராமங்களில் இருந்து கலந்து கொண்டனர் இதில் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் புற்றுநோயை உருவாக்குவதையும் மறைமுகமாக பெட்டிக்கடைகளில் சாக்கிலெட் மற்றும் போதை உருவாக்கும் பாக்கு போன்றவை ஏற்படும் தீங்கு குறித்த மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் தள்ளி புகையிலை கடை இருக்க வேண்டும் என்பதை கூறினர். இதில் மாக்ட் அமைப்பின் போஸ்கோ மற்றும் வைஸ்னவி ஆகியோர் நடத்தினர். இதை சைல்டு வாய்ஸ் அண்ணாதுரை துவக்கி வைத்தார் சிபி, ரம்யா, வனிதா, தமிழ்மொழி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

நிலக்கோட்டை தாலுகா.  செய்தியாளர் ம. ராஜா