மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவனம் பட்டி ரோட்டில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக வடக்கு ஒன்றிய செயலாளர், சீமானத்து ஊராட்சி மன்ற தலைவருமான அஜித்பாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் மாணவர்களுக்கு தான் படித்த பள்ளி இதுதான் எனவும் இந்த அளவிற்கு நான் மேல் வருவதற்கு உறுதுணையாக இருந்தது. ஆசிரியர்கள் மட்டும்தான் எனவும் தாயாகவும் தந்தையாகவும் பார்த்துக் கொள்வது ஆசிரியர்கள் தான். பசியோடு வந்தாலும் தாயின் அன்போடு பசியை போக்குவார்கள் ஆசிரியர்கள். தான் கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் முன்பு கண்ணீர் மல்க போட்டோ எடுத்துக் கொண்டார். மேலும் ஆசிரியர்கள் அன்பு தாயின் அன்புக்கு இணையானது என்றும் ஆகையால் அனைத்து மாணவ மாணவிகளும் ஆசிரியர்கள் கூறுவது போல் நன்கு படித்து என்னை போல் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கண்ணீர் மல்க சிறுமிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி அனைவரையும் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தலைமை ஆசிரியர் மதன் பிரபு ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் விஜய பாண்டியன் கவுன்சிலர் பிரகதீஸ்வரன் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.