மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை (MAEF) மூட ஒன்றிய சிறுபான்மை அமைச்சகம் (MoMA) உத்தரவிட்டுள்ளதற்கு எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இலியாஸ் தும்பே கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சிறுபான்மை முஸ்லிம்களுக்கான உரிமையை மறுக்கும் ஒன்றிய அரசின் ஒரு பகுதி நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ள அவர், “பிரதமர் மோடி தனது அனைத்து மேடைகளிலும் அனைவருக்கும் உள்ளடங்கிய வளர்ச்சி (சப் கா சாத், சப் கா விகாஸ்) பற்றி பேசுகையில், சிறுபான்மை விவகார அமைச்சகம் (MoMA) மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை (MAEF) மூட உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவானது பிரதமரின் முழக்கத்தில் உள்ள “சப்” என்பது முஸ்லிம்களை அதன் வரம்பிலிருந்து விலக்குகிறது என்பதற்கான தெளிவான செய்தியாகும். சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் (MoMA) முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை, இந்தியாவில் உள்ள முஸ்லீம் சமூகத்தின் கல்வியில் பின்தங்கிய பிரிவினரிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 1989 இல் நிறுவப்பட்டது, மேலும் இது சமூகத்தின் கல்வி அதிகாரமளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அறக்கட்டளையை மூடுவதற்கான முடிவுக்கான சரியான காரணத்தை காட்டாத இந்த உத்தரவு, சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி கனவுகளில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். அறக்கட்டளையின் முயற்சிகளான காஜா கரீப் நவாஸ் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் மற்றும் சிறுபான்மை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மதச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த திறமையான சிறுமிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் போன்ற பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை திட்டம் ஆகியவை அதன் பயனாளிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். இந்த முடிவின் விளைவாக அரசாங்கம் இதைத்தான் எதிர்பார்க்கிறது. மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையை மூடும் முடிவை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அவர்களின் மதத்தின் பெயரால் அரசியலமைப்பு உரிமையை மறுப்பது மட்டுமே இதன் ஒரே நோக்கமாக இருக்கிறது.” என தெரிவித்தார்.
You must be logged in to post a comment.