![IMG-20170327-WA0011[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170327-WA00111.jpg?resize=678%2C381&ssl=1)
கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் வள்ளல் சீதக்காதி சாலையில் இயங்கி வரும் அல் மதரஸத்துர் ராழியா சிறுவர் மதரஸாவில் நேற்று 26.03.17 இரவு 8.30 மணியளவில் மதரஸாவின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை ஆலீம் ஆலீம் தவ்ஹீத் ஜமாலி தலைமை ஏற்று நடத்தினார். ஆலீம் தவ்ஹீத் ஜமாலி, ஆலீம் அப்துல் நாசர் ஜமாலி, ஆலீம் சேகு கஸ்ஸாலி சதக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சட்ட ஆலோசகர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பயான் போட்டி, வினாடி வினா போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மார்க்க கல்விப் பணியினை சிறப்பாக மாணவர்களுக்கு வழங்கிய ஆலீம் பெருந்தகைகளுக்கும், மதரஸா நிர்வாகிகளுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான் கான் நல்ல முறையில் செய்திருந்தார்.
You must be logged in to post a comment.