கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கருவேலம் ஒழித்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சமூகநல அமைப்பு சார்பாக கருவேலம் ஒழித்தல் மற்றும் நீராதாரத்தைப் பாதுகாத்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 27.03.2017 காலை 10.30 மணிக்கு நடந்தது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவி M.காதர் நஃபிலா கிராத் ஓதினார். பின்னர் தொழில்நுட்பத் தகவல் துறை மூன்றாமாண்டு மாணவி M.Y ஃபாத்திமா பசிஹா வரவேற்புரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சுமையா தலைமை உரை ஆற்றினார். பின்னர் சிவகங்கை ராஜா துறை சிங்கம் அரசு கலைக் கல்லூரி, உதவி பேராசிரியர் முனைவர் எம். கணேசன் உதவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர்வளத்தை பாதுகாத்தல் மற்றும் சீமை கருவேலம், நாட்டு கருவேலம் அகற்றுதல் பற்றி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக ஆங்கிலத் துறை மூன்றாமாண்டு மாணவி கதிஜா பானு நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.