தேனியில் ஸ்மார்ட் கார்டுக்கு பதிலாக ஆதார் அட்டை மூலம் அரசு வினியோக பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்…அறிவிப்பு..

தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து குடும்ப அட்டை மாறாமல் உள்தாள் இணைப்பு மூலம் பயனாளிகள் ரேசன் கடைகளில் பொருட்கள் பெறப்பட்டு வந்தன, தற்பொழுது ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுu பயன்பாட்டில் உள்ளது, இது சிறிய அளவில் இருப்பதாலும் மற்ற சான்றிதழ்கள் பெறவும் ஒரிஜினல் கொண்டு செல்வதாலும் ஸ்மார்ட் கார்டை மக்கள் அடிக்கடி காணாமல் போட்டு விடுகின்றன, இதனால் பொதுமக்கள் அச்சம் கொண்டு வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு ஏராளமானோர் புதிய ஸ்மார்ட் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்துள்ளனர், இதை ஆய்வு செய்த உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் திரு, மோகன்முனியாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி, பல்லவி பல்தேவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவுப்படி ஏழை நடுத்தர மக்கள் ஸ்மார்ட் கார்டு தவறி விட்டால் அவர்கள் குடும்பத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டைகளை கொண்டு போய் ரேசன் கடைகளில் சப்ளை பெற்றுக் கொள்ளலாம், அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள், நியாய விலை  கடைகளுக்கு விபரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள் பயப்படத் தேவையில்லை என அறிவித்துள்ளார்கள்.