உசிலம்பட்டியில் அமமுக வழக்கறிஞர்கள் சங்க ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை ..

உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி பாராளுமன்ற தேர்தல் குறித்த வழிக்கறிஞர்கள் சங்க ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தேனி பாராளுமன்ற தேர்தல் குறித்த வழிக்கறிஞர்கள் சங்க ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மதுரை புறநகர் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் வீரபிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் வழக்கறிஞர் பிரிவில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.