இருந்தும் பலனில்லாமல் இருக்கும் மதுரை பசுமலை ATM இயந்திரம்..

மதுரை பசுமலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் பணம் எடுப்பதற்கும் பணம் செலுத்துவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாகும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, வேண்டுமென்றால் நீங்கள் மேலிடத்தில் புகார் எடுத்துச் செல்லுங்கள், நாங்கள் எதுவும் செய்ய முடியாது என அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். பணம் செலுத்த வேண்டுமானாலும் பணம் எடுக்க வேண்டும் என்றாலும் 2 முதல் 3 கிலோ மீட்டர் சென்று தான் பணம் செலுத்துவது அல்லது பணம் எடுக்கவும் முடியும்.

மற்ற ஏடிஎம்களை உபயோகித்தால் ரூபாய் 20 கட்டணம் வசூல் செய்கிறார்கள். மேலும் நேரடியாக பணம் கட்டினால் எடுத்தாலும் பணம் பிடித்தம் செய்கிறார்கள். இதனால் பொதுமக்கள் பணம் வீணாவதும் நேரமும் வீணாகிறது என பொதுமக்கள் புலம்பிக் கொண்டு செல்கிறார்கள்.

செய்தி. வி.காளமேகம் மதுரை மாவட்டம்