Home செய்திகள் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் துவக்க விழா…

பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் துவக்க விழா…

by ஆசிரியர்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இராமநாதபுரம் கிளை சார்பில் பெருங்குளம் கிராமத்தில் பகல் நேர மருத்துவமனை நடத்தப்பட்டுவருகிறது.இந்த மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் அவசர சிகிச்சை வாகனம் ( நடமாடும் ஐசியு ) சேவையை ராமநாதபுரம் சரக காவல் துணை தலைவர் என்.காமினி இன்று தொடங்கி வைத்தார். விழாவிற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூன் தலைமை வைத்தார். புரவலர் ராமநாதன், பெருங்குளம் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ரெட் கிராஸ் துணை தலைவர் ஹாஜி அஸ்மாபாக் அன்வர்தீன் வரவேற்றார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தை ராமநாதபுரம் ரெட் கிராஸ் அமைப்பிற்கு நன்கொடை வழங்கிய ஹாஜி கே.எஸ்.எம் சகாபுதீன், கீழக்கரை ரெட் கிராஸ் அமைப்பாளர் என்.சுந்தரம், ஜி.ஜானகிராமன் டாக்டர் எம்.சுந்தர்ராஜன், யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் பேராசிரியர் வள்ளிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராமநாதபுரம் சரக காவல் துணை தலைவர் என்.காமினி ஆம்புலன்ஸ் வாகன சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் வெண்டிலேட்டர், மல்டி பாரமானிட்டர் ( இசிஜி ., இதயத் துடிப்பு, நாடித் துடிப்பு , ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை அளவீடு சாதனங்கள் மற்றும் சக்சன் கருவி உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகள் குளிர்சாதன வசதியுடன் உள்ளன.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் முகமது சதக் ஹமீது பெண்கள் கல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொருளாளர் சி. குணசேகரன், இணைச்செயலாளர் தி.ஜீவா, பொறியாளர் வி.சதீஷ்குமார், பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் அ.க மலகண்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஐ. தமிழரசன், என். கார்த்திக், ஆர். தாமரைச்செல்வன், எஸ். கருப்பசாமி, சி. தயாநிதி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் எம்.ராக் லாண்ட் மதுரம் ஒருங்கிணைத்தார்.

செய்திகள்:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!