வேலூர் மாவட்டம் வாலாஜா சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர் பலி…

வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற காண்டெய்னர் ஏற்றிச்செல்லும் லாரி மீது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதிய விபத்தில் 3 ஆண், 2 பெண் பெண் என மொத்தம் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியானது மின் விளக்கு இல்லாத இருண்ட பகுதி என்பதாலும், லாரியின் நீளம் அதிகம் என்பதால் சாலையை கடக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் வேகமாக கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு. லாரி சாலையின் குறுக்கே நின்றிருப்பதால் வேலூர் டூ சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு தற்போது சீர்செய்யப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்க் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் பர்வேஷ் குமார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இவ்விபத்து குறித்து வாலாஜாப்ட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் வாலாஜா சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலி இந்த விபத்தில் பலியானவர்கள் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஆரணி பகுதிக்கு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு சென்னை நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டது இதில் சென்னை பனையூர் பகுதியில் வசிப்பவர் சாதிக் அலி குடும்பத்தார் அல்லது உறவினர் என்பது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுசாதிக் அலி என்பவர் சோழிங்கநல்லூரில் உள்ள மீன் மார்க்கெட்டில் கோழிக்கடை வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்..