அதிமுக-பாமக ஒப்பந்தம் கையெழுத்தானது.. நேத்து பேச்சு காத்தோடு போச்சு..

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ,  7 தொகுதிகளும்  வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.