வேலூர் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை வெற்றி உறுதி – புதிய நீதி கட்சி நிறுவனதலைவர் ஏ.சி.சண்முகம் ஆருடம்…

வேலூர் பாராளுமன்ற தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு அதிமுக ஒதுக்கி உள்ளது. வேலூர் பென்ஸ் பார்க் ஓட்டலில் வணிக வரி துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், அதிமுக கூட்டணியில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் புதிய நீதிக் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும், கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, புதிய நீதிக் கட்சிகளின் வாக்குகள் கூடுதல் பலம் என்றும் அதிகமாக வாக்குகள் பெற்று அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும் என்று தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் விஜய், அதிமுக எம்எல்ஏக்கள் அரக்கோணம் ரவி, கே.வி, குப்பம் லோகநாதன் அதிமுக கிழக்கு வேலூர் மாவட்ட துணை செயலாளர் SRK அப்பு பாமக தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்:- வேலூர்