திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள உரக்கடை, டீக்கடை, மற்றும் பூ கடைகளில் நேற்று (14/03/2019) திடீரென பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கிறதா? என கடை கடையாக சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கடைகளில் பாலித்தின் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். அப்போது பறிமுதல் செய்த பாலிதீன் பைகள் மொத்தம் 100. கிலோ அளவிற்கு பிடிபட்டது. அனைத்தும் அரளிப் பூக்கள் அடைத்து விற்கப்படும் பாலிதீன் பைகளாக இருந்தது.
இது பற்றி அரசு அதிகாரிகள் கூறுகையில் “இந்தப் பைகளில் அடைத்து பூக்களை இனிமேல் விவசாயிகள் யாரேனும் பயன்படுத்தினால் அரசு விதித்துள்ள அபராத தொகையை விவசாயிகளிடமிருந்து உடனடியாக வசூலிக்கப்படும். எனவே பூ மார்க்கெட் பகுதியில் கடந்த சில நாட்களாக பல்வேறு வகையில் சோதனை செய்தோம் எச்சரிக்கை விடுத்தும் இதுவரை விவசாயிகள் பயன்படுத்திப் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வருங்காலங்களில் முறையாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர். உடன் சுகாதார ஆய்வாளர் ஜாபர் அலி, சுகாதார மேற்பார்வையாளர் மேஸ்திரி கல்யாணி, மஞ்சுளா பாலக்குமார் மற்றும் பலர் இருந்தனர்.
You must be logged in to post a comment.