பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் ! மதுரை ஆதீனம் வலியுறுத்தல் !

பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு, மரண தண்டனை வழங்கிட வேண்டும் என, மதுரை ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.

ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் துன்புறுத்தல் எங்கு நடந்தாலும், அ.தி.மு.க வோ, திமுக வோ மற்றைய கட்சிகளோ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருகின்றார்கள்; இதில் எந்தக் கட்சிக்கும் கருத்து மாறுபாடு இல்லை.

இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்களை அழித்து, ஒழிக்க வேண்டுமானால் “அரபு நாடுகள் சட்டத்தை இந்தியத் திருநாட்டில் அமல்படுத்த வேண்டுமென, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நாம் வலியுறுத்தியிருக்கிறோம்”. அதனையே, நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். அதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதைத் தெரிவிப்பதோடு, மாணவிகள், இளம் பெண்கள் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள், பாதுகாப்பாக வாழ்வதற்கு உரிய, வழிவகைகளை, அரசு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகின்றோம்.செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்