உசிலம்பட்டி அருகே சாலையோர மின்கம்பத்தில் மோதி டூவிலரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலி…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேரையூர் குப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவணான்டி மகன் சேகர் (40), மற்றும் பாண்டியன் மகன் முத்துப்பாண்டி (40). இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் உசிலம்பட்டியிலிருந்து தனது ஊரான குப்பல்நத்திற்கு தனது டூவிலரில் சென்றுகொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி டூவிலர் மின்கம்பத்தில் மோதியது. டூவிலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே முத்துப்பாண்டி(49), சேகர்(40) பலியானார்.

தகவலறிந்த பேரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- மோகன், உசிலம்பட்டி