அபுதாபியில் மர்ஹபா சமூக நலப்பேரவை சார்பாக சமூக நல்லிணக்க பெருவிழா..

ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் மர்ஹபா சமூக நலப் பேரவை சார்பாக மாபெரும் சமூக நல்லிணக்க பெருவிழா இஃப்தார் நிகழ்ச்சியோடு இணைந்து நடைபெற்றது.  இந்நிகழ்வு அபுதாபி இந்தியன் கலாச்சார மையத்தில் இன்று (02-06-2018) மாலை 05.30 மணி முதல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்திருந்த மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, விடுதலை சிறுத்தை கட்சியின் சிறப்பு பேச்சாளர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி சிறப்புரையாற்றினார்கள்.

பின்னர் சிறப்புரையை தொடர்ந்து கலந்துரையாடல் மற்றும் நோன்பு திறப்பதற்கான நிகழ்வும் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.