சோழவந்தான்,திருவேடகம்,தென்கரை ஆகிய சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவ ஆலயங்களில் நடராஜர் மற்றும் சிவபெருமான் சிவகாமி அம்பாள் மாணிக்கவாசகருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் அதைத் தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை பூஜை நடைபெறும்.இதேபோல் நேற்று அதிகாலை சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டஈஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள நடராஜர் சிவகாமிஅம்பாள் மாணிக்கவாசகர் திருமஞ்சனம் பால் தயிர் உட்பட 12 அபிஷேகம் நடந்தது அர்ச்சகர் செந்தில் குமரேசன் சிறப்பு பூஜைகள் செய்தார் உபயோதாரர் முன்னால் எம்எல்ஏ சந்திரசேகரன் பிரசாதம் வழங்கினார் சிவ பக்தர்கள் திருவம்பாவை பாடினார்கள். நடராஜர் சிவகாமிஅம்மாள் மற்றும் மாணிக்கவாசகர் வீதி உலா நடந்தது.சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோமாதா பூஜை நடந்தது.இதை தொடர்ந்து நடராஜர், சிவகாமிஅம்மாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அர்ச்சகர்கள் பரசுராமன்,ரவிச்சந்திரன்,அய்யப்பன் ஆகியோர் திருமஞ்சனம்,பால்,தயிர் உட்பட 11 அபிஷேகம் செய்து,திருவம்பாவை பாராயணம் பாடினார்கள். சிறப்பு அர்ச்சனை,பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருவேடகம் ஏடகநாதர்கோவில், திருவாதிரை ஆருத்ராதரிசனத்தை யொட்டி நடராஜருக்கு அபிஷேகம்,சிறப்பு அர்ச்சனை பூஜை நடந்தது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.