ஜவ்வு மிட்டாய்… 80களில் குழந்தைகளின் சிறப்பு இனிப்பு…

80களில் “ஜவ்வு மிட்டாய்” இந்த பெயரை கேட்டாலே குழந்தைகளுக்கு ஒரு உற்சாகம் பிறக்கும்.  இந்த மிட்டாயில் பல வகை பொம்மைகளை செய்து தருபவரை ஒரு பெரிய ஹீரோவாகவே பார்க்கப்படுவார்.  அவரை சுற்றி ஒரு கூட்டம், அவர் வைத்திருக்கும் பொம்மை மூலம் எழுப்பும் சத்தத்தை ஒரு கூட்டம் ரசிக்கும், மறுபுறம் அவர் ஜவ்வு மிட்டாயில் செய்து தரும் வாட்ச், சைக்கிள், நைக்லஸ், மயில், தேள் என விதவிதமான மிட்டாய்களை அவர் இலவசமாக தரும் மிட்டாய் வாங்க ஒரு வரிசை, ஆனால் நவீன வளர்ச்சி இந்த அழகிய கனவுகளை எல்லாம் அழித்து விட்டது என்றே கூறலாம்.

இது பற்றி இன்றளவும் இத்தொழிலை செய்து வரும் புதுக்கோட்டைய சார்ந்த முகைதீன் கூறுகையில், “ஒரு காலத்தில் எங்கள் ஊரில் 50கும் மேற்பட்டோர் செய்து வந்தனர், ஆனால் இன்று 2 பேர் மட்டுமே செய்து வருகிறோம், கீழக்கரை போன்ற ஊர்களுக்கு மாதம் 5 அல்லது 6 நாட்கள் தங்கி இருப்போம், இதை தவிர்த்து சிறப்பு விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களில் தொழிலை தொடர்கிறோம்” என்றார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..