Home செய்திகள் இலங்கைத் தமிழர் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் பிறந்தநாள் இன்று (மார்ச் 4, 1938)

இலங்கைத் தமிழர் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் பிறந்தநாள் இன்று (மார்ச் 4, 1938)

by mohan

அன்ரன் பாலசிங்கம் மார்ச் 4, 1938ல் மட்டக்களப்பு, இலங்கையில் பிறந்தார். ஆரம்பகாலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார்.[1][2] இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார். அவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் இவரது முதல் மனைவி இறந்த பின் காதல் திருமணம் செய்துகொண்டார்.1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983, கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர்.

1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார்.பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் புலிகள் வெற்றிபெற்றிருந்தாலும் அந்த அமைப்பை திரை மறைவில் வழி நடத்தியவர் அன்ரன் பாலசிங்கமே என்பதை வன்னி ஊடகவியலாளர் மாநாடே வெளிப்படுத்தியது.

அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் ஆன் பாலசிங்கம் புலிகளின் முக்கிய உறுப்பினரானார். இவர்ஈழப் போராட்டம் குறித்த பல நூல்களின் ஆசிரியர்.ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழி பெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.2006 ஆம் ஆண்டி டிசெம்பர் மாதம் பாலசிங்கத்தின் மறைவின் பின்னர் அடேல் பாலசிங்கம் அரசியலில் காணாமல் போனார். பிரித்தானிய அரசு ஈழப் போராட்டத்தை அழிப்பதற்கும் தவறான வழிகளில் திசைதிருப்புவதற்கும் ஆரம்பத்திலிருந்தே முயற்சிகளை மேற்கொண்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பிரித்தானிய அரசுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய அன்ரன் பாலசிங்கத்தின் பங்கு தொடர்பான கேள்விகள் எழுகின்றன.

இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகமாகக் காணப்படுகிறது. தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு புதிய அரசியல் இயக்கத்தை வடிவமைப்பது இன்று அவசியமானதாகும்.2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர்.தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார்.இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் செனிவாவில் நடைபெற்ற, செனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!