Home செய்திகள் 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்..

3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்..

by Askar

 

3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம்..

வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மற்ற வகுப்பினருக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் ஏராளமான பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் அமைப்பு வடிவமைத்து வருகிறது.

இதற்கிடையே, வரும் 2024 – 25ம் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை மாற்ற உள்ளதாக, என்.சி.இ.ஆர்.டி., அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ.,க்கும் தகவல் அனுப்பியுள்ளது.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குனர் ஜோசப் இமானுவேல், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, 3 மற்றும் 6ம் வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இதற்கான புத்தகங்கள் அச்சடிக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் கல்வியாண்டில், 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும்; மற்ற வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாறுதலும் இல்லை.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com