Home செய்திகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் பார்த்ததுக்காகவும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு மேயர் பாராட்டு.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் பார்த்ததுக்காகவும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கு மேயர் பாராட்டு.

by mohan

மாநகராட்சியில் 4 மண்டல சுகாதார நிலையங்கள் உட்பட 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கே நடைபெறும் பிரசவங்களின் சராசரி எண்ணிக்கையை 30 சதவீதம் அளவிற்கு அதிகரித்தமைக்காகவும் பேறுகால இறப்பு விகிதத்தை பெருமளவில் குறைத்தமைக்காகவும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை,மேயர்இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன், ஆகியோரிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 19 ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவ பரிசோதனை, குழந்தையின் வளர்ச்சி, ஊட்டசத்து, கொரோனா தடுப்பூசி, குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிககவனத்துடனும், பாதுகாப்பாகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அரசின் பேறுகால முன்கவனிப்பு திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் மூலம் கர்ப்பிணிகளுக்கு செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று பல்வேறு பேறுகால ஆலோசனைகள் வழங்கப்பட்டு தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.இதன் பலனாக ஒரு மாதத்திற்கு சராசரியாக 70 முதல் 80 பிரசவங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது சராசரியாக 120 பிரசவங்கள் என்ற அளவிற்கு அதிகரித்து உள்ளது.மேலும், குறிப்பிடதகுந்த அம்சமாக செப்டம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலக்கட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களின் பேறுகால இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் தீவிர இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரே ஒருவர் மட்டும் பிரசவம் நடைபெற்று 36 நாட்கள் கழித்து உயிரிழந்து உள்ளார். இதை தவிர்த்து, மதுரை மாநகராட்சி பகுதிகளில் பேறுகால மரணம் எதுவும் கடந்த 6 மாத காலத்தில் ஏற்படவில்லை.இது விகிதாச்சார அடிப்படையில், ஒரு லட்சம் குழந்தை பிறப்பிற்கு 9 ஆகும்.இதனை எட்ட சிறந்த முறையில் பணிபுரிந்து தீவிர நோய் பாதிப்பு ஏதும் உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அரசு இராசாசி மருத்துவமனை மகப்பேறு மருத்துவ பிரிவுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளித்து சிறப்பான முறையில் செயல்பட்டமைக்கும், தாய்மார்களுக்கு நம்பிக்கை அளித்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கையை குறிப்பிடதகுந்த அளவு அதிகரித்தமைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும்மேயர் பாராட்டு தெரிவித்தார்.மேலும், இதே போல, தொடர்ந்து சிறந்த முறையில் செயல்பட்டு பேறுகால இறப்பு விகிதத்தை முற்றிலும் தவிர்க்கவும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும் அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து சிறந்த முறையில் செயல்படுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களைமேயர் கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்வில், துணை ஆணையாளர் மரு.சங்கீதா, நகர்நலஅலுவலர் மரு.ராஜா, உதவி நகர்நலஅலுவலர் மரு.தினேஷ்குமார், மண்டல மருத்துவ அலுவலர்கள் மருத்துவர்.எஸ்.ஜீனத்;, மருத்துவர்.சி.ஸ்ரீகோதை மருத்துவர். பி.வி.புவனேஸ்வரி, மருத்துவர். ஆர்.சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!