மதுரையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான இளைய சூரியன் உதயநிதி ஸ்டாலின் MLA மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அச்சம்பத்து SVK நகர் மகிழ்ச்சி மழலையர் பள்ளி மற்றும் அகாடமி உள்விளையாட்டரங்கில் பள்ளி மாணவர்களுக்கு தென் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் நடத்தப்பட்டது. உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் மருது வரவேற்புரை நிகழ்த்தினார். உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட தலைவர் செளந்தர் தலைமை வகித்தார். மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தெற்குமாவட்ட செயலாளருமான கோ.தளபதி MLA மற்றும் புறநகர் மாவட்ட துணைச்செயலாளர் பாலாஜி மாவட்ட மகளிரணி தலைவர் சின்னம்மாள் கலசலிங்கம் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சங்கீதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தொழிலதிபர்கள் SVK செல்வராஜ் மற்றும் KVR கண்ணன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மகிழ்ச்சி அகாடமியின் செயலாளர் சார்லஸ் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெங்கடேஷ்குமார் , திவான் இஸ்மாயில் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர். உதயநிதி நற்பணி மன்ற மாநகர தலைவர் சிவபிரபாகரன் நன்றியுரை கூறினார். வைகை மார்சியல் ஆர்ட்ஸ் பாலா கார்மேகம் அழகுமணி உதயா ரஞ்சித் சிவா ராம் சரத் மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்