மதுரையில் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கில் சினிமா பார்ப்பதற்க்கு மதுரை அவனியபுரத்தை சேர்ந்த பைப் கடை உரிமையாளர் மகேஷ்குமார் மற்றும் அவரிடம் பணியாற்றும் கடை ஊழியர்களுடன் சினிமாவுக்கு சென்ற உடன் வந்த பெண்ணை பெண்ணின் வீட்டிற்கு அழைத்து இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றிருந்த போது மதுரை நேதாஜி ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது அங்கு இரவு ரோந்து பணியில் இருந்த காவலர் சந்தேகத்தின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த அந்த பெண் மற்றும் அவரது உரிமையாளரை மிரட்டி பெண்ணை வீட்டில் தானே அழைத்துச் சென்று விட்டு விடுவதாகவும், தொடர்ந்து மகேஷ் மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்து மகேஷ்குமாரை மட்டும் அனுப்பி வைத்துள்ளார்,தொடர்ந்து அந்த பெண்ணை அழைத்து கொண்டு மறைவான இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அந்த பெண்ணை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது இதனைத்தொடர்ந்து அந்தப்பெண் மகேஷ்குமார் இடம் சம்பவம் குறித்து தெரிவித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திலகர் திடல் காவல் துறையினர் , திலகர் திடல் காவல் நிலைய குற்ற பிரிவு காவலர் முருகனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சம்பவம் நடைபெற்றது உண்மை தான் எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட மகேஷ் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.