கீழக்கரை SDPI கட்சி சார்பாக அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனோ நோயாளிகள் சம்பந்தமாக தலைமை மருத்துவருடன் சந்திப்பு..

இன்று  (09/06/2021) எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை நகர் நிர்வாகம் சார்பாக மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அரூஸி  தலைமையில் கீழக்கரை அரசு மருத்துவமனையில் கொரொனா நோயாளிகள் சிகிச்சை, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, ஆக்சிஜன், மற்றும் உள்கட்டமைப்பு சம்பந்தமாக தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

இது சம்பந்தமாக  தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் கூறியதாவது, “இது வர்ரை  11 உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அவர்களுக்கு நடைபெற்று வருகிறது. மேலும்  அதில் இரண்டு நோயாளிகள் பூரண குணப்படுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஆக்சிஜன் அளவு 90 வரை உள்ள நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்படுவதாகவும், அதற்கு குறைவாக உள்ள நோயாளிகள் அவர்களின் உடல் நலன் கருதியும் கூடுதல் மருத்துவ வசதிகள் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் அரசு மருத்துவமனை கட்டிடம் பழுதடைந்து இருப்பதாகவும் அதை புதுப்பிக்க வேண்டும் என்று நம்மிடம் பேசினார்.  இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் கீழக்கரை நகர் சார்பாக அரசு மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் நகர தலைவர் ஹமீது பைசல் செயலாளர்,  பகுருதீன் பொருளாளர் தாஜூல் அமீன்,  இணை செயலாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image