இராமநாதபுரம் மாவட்டம் எம்.எஸ்.கே நகர் பகவதி அம்மன் பூச்சொரிதல் விழா !

மநாதபுரம்  அருகேயுள்ள      எம்.எஸ்.கே.நகர் வீர சைவ ஆண்டிபண்டாரத்தார்  சமூகம் மற்றும் அனைத்து பூ வியாபாரிகள் இணைந்து     நடத்திய அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய 16 ஆம் ஆண்டு பூக்குழி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.  இவ்விழா  ஆண்டி பண்டாரத்தார் சமூக நலச் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் து.தலைவர் மலைச்சாமி முன்னிலையில்   அம்மனுக்கு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கி  திருவிளக்கு பூஜைகள் நடைபெற்று அம்மனுக்கு அபிஷேக தீப அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அம்மன் கோவில் முன்பாக மாபெரும் அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.  பின்னர்     நொச்சி ஊரணியிலிருந்து  அக்னி சட்டி, வேல்காவடிகள், மயில் காவடிகள் , பால் குடங்கள் , பறவை காவடிகள் , பூத்தட்டுகள் புடைசூழ அம்மன் சிலையை அலங்கரித்து   நகரின்முக்கிய வீதி வழியாக       ஊர்வலமாக சென்று   கோவிலை   வந்தடைந்தது.
பின்னர் ஆலயத்தில் முக்கிய நிகழ்வான பூச்சொரிதழ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை  ஆனந்த குமார், மாரி, ராமச்சந்திரன் மற்றும் ஆண்டி பண்டாரத்தார் இளைஞர் சங்கத்தினர்  செய்திருந்தனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image