ஏர்வாடியில் தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா

கீழக்கரை தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் சார்பாக ஏர்வாடி எலைட் மெட்ரிகுலேசன் பள்ளியில் நேற்று 17.02.2017  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியினை தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் முதல்வர்.சுமையா துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஏர்வாடி எலைட் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் முகம்மது அலி ஜின்னா சார்பாக பள்ளியின் முதல்வர் சத்தியமூர்த்தி, துணை முதல்வர் வசந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி ஜமாஅத் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிகளை ஆசிரியை விசாலாட்சி ஒருங்கிணைத்திருந்தார்.

இது குறித்து தாசீம் பீவி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணிகள் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை விசாலாட்சி கூறும் போது ”இந்த பயனுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி 17.02.17 முதல் 23.02.17 வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெற உள்ளது. ஏர்வாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பின் கீழ் விழிப்புணர்வினை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். முக்கியமாக கரு வேல மரங்களை வேரோடு அழிப்பது, பசுமை நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிப்பது, மன நோயாளிகள் மறுவாழ்வுக்கு திட்டமிடுவது, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.