உசிலம்பட்டி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 240கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வத்தலகுண்டு சாலையில் காரில் கஞ்சா கடத்தி செல்வதாக மதுரை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் உசிலம்பட்டி அன்னம்பார்பட்டி இரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் காரில் கஞ்சா கடத்திவந்ததது தெரியவந்தது. காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் வடகாட்டுப்பட்யைச் சேர்ந்த குமார்(41),அன்னமார்பட்டியைச் சேர்ந்த சௌந்திரபாண்டியன்(37), வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ்(35), வலையபட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஸ்(36), மலைப்பட்டியைச் சேர்ந்த இளங்கோ(32), போலாக்காபட்டியைச் சேர்ந்த நரேஷ்(24), செல்லம்பட்டியைச் சேர்ந்த முத்துராஜா(41), மற்றும் செல்லம்பட்டியைச் சேர்ந்த மேனகா(29) என்பதும் தெரியவந்தது. போலீசார் 8பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 240கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து விசாணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியொடிய பாலமுருகன் மற்றும் சுரேஸ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

உசிலைசிந்தனியா