பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் சென்ற உ.பி. யோகி அரசை கண்டித்து கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்..

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கடத்திச் செல்லப்பட்ட உ.பி. யோகி அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒருபகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக கீழக்கரையில் லெப்பை டீ கடை அருகில் மாலை 5/15 மணியளவில் நகர் தலைவர்_அஹமது நதீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை பாப்புலர் ஃப்ரண்ட் நகர் செயற்குழு உறுப்பினர்_சிராஜ் தொகுத்து வழங்கினார். பாப்புலர்ஃப்ரண்ட் செயற்குழு உறுப்பினர் மற்றும்  ஊடக பிரிவு மக்கள் செய்தி தொடர்பாளர் கீழைஅஸ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முன்னிலை எஸ்டிபிஐ கட்சியின் தொகுதிதுணை தலைவர் நூருல் ஜமான்,நகர் செயலாளர்_பக்ருதீன் துணை தலைவர் ஹாஜா அலாவுதீன், Pfi, sdpi, sdtu நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ கட்சியின் சாலைதெரு கிளை செயலாளர் அஹமது ஹுசைன் கண்டனகோசம்ஆற்றினார். பாப்புலர்ஃப்ரண்ட் செயற்குழு உறுப்பினர் ரிஸ்வி கண்டனஉரை நிகழ்த்தினார்.

எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி தலைவர் அப்துல் ஜெமீல் சிறப்புஉரை நிகழ்த்தினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் Pfi, sdpi, sdtu, செயல்வீரர்களும் ஜமாஅத் பிரமுகர்கள்,சங்கங்களின்நிர்வாகிகள், பொதுமக்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள்கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் செயற்குழு உறுப்பினர் செய்யது அபூதாஹிர் நன்றியுரைஆற்றினார்.

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image