
மதுரை மாவட்டம் முத்துப்பட்டி அருகே புதுக்குளம் பகுதியில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் என்று நடந்து செல்பவர்களை கடிப்பதால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில் இன்று காலை சஞ்சய் ,6 வயது சிறுவனை நாய் கடித்து படுகாயமடைந்ததில் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். ஏழு தையல்கள் போடப்பட்டுள்ளன.இச்சம்பவம் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களிடையே கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Leave a Reply
You must be logged in to post a comment.