உசிலம்பட்டி அருகே 80அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு தீயணைப்புத் துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மனைவி ஜெயமணி (35). கணவர் இறந்து விட்ட நிலையில் ஜெயமணி குடும்பத்தை கவனித்து வருகிறார்.இவர் வழக்கம்போல் மேய்ச்சலுக்காக தனது தோட்டத்தில் கிணற்றின் அருகில் தனது பசு மாட்டை கட்டி வைத்து விட்டு விவசாய வேலைகளை கவனித்துள்ளார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக பசு மாடு கிணற்றில் தவறி விழுந்தது.இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினர் 80அடி ஆழ (தண்ணீர் உள்ளது) கிணற்றில் விழுந்த பசு மாட்டை சுமார் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளர் ஜெயமணியிடம் ஓப்படைத்தனர்.

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image