பள்ளப்பட்டியில் அம்மா மினி கிளினிக் துவக்கவிழா

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பட்டி ஊராட்சியில் உள்ள தெற்கு தெருவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுபடி பள்ளபட்டி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அம்மா மினி கிளினிக் துவக்க விழா தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன், முன்னாள் மாநகராட்சி மேயர் மருதராஜ், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரெஜினா நாயகம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், நகரச் செயலாளர்கள் தண்டபாணி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா