மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா!

மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் நலச்சங்கம் துவக்க விழா மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.இந்த துவக்க விழாவிற்கு எழுத்தர் சங்க தலைவர் செந்தில் குமரன், நிர்வாக அலுவலர் மற்றும் கணக்கு அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், நிர்வாக அலுவலர்கள் ரெங்கராஜ், ஆறுமுகம், வரலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.பொறியியல் பிரிவு பணியாளர் சங்க அவைத்தலைவர் தனசேகரன், வருவாய் உதவியாளர் நலச்சங்க அவைத் தலைவர் ஜெயராமன், ஓட்டுனர் சங்க தலைவர் முருகன், ஓட்டுநர் சங்க செயலாளர் ஜெகதீசன், அலுவலக உதவியாளர் சங்க தலைவர் திருப்பதி, தூய்மைப் பணி மேற் பார்வையாளர்கள் நலச்சங்க தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எழுத்தர் சங்க செயலாளர் கிரிஜாபாய், பொறியியல் பிரிவு பணியாளர் சங்க தலைவர் மற்றும் மதுரை மாநகராட்சி கூட்டுறவு சிக்கன நாணய சங்க செயலாளர் கே கண்ணன், எழுத்தர் சங்க இணைச் செயலாளர் ஆனந்தன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் தமிழ், பொறியியல் பிரிவு பணியாளர் சங்க பொருளாளர் கே.டி துரைக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.வருவாய் உதவியாளர் நலச்சங்க தலைவர் முகுந்தன், பொறியியல் பணியாளர் சங்க தலைவர் மகுடீஸ்வரன், எழுத்தர் சங்கத் துணைத் தலைவர் சின்னச்சாமி ஆகியோர் நன்றி கூறினர்.இவ்விழாவில் ஏராளமான மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கீழை நியூஸூக்காக மதுரை கனகராஜ்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image